சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம்

விக்ரம் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாகவும், பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம்
Published on

விக்ரம் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாகவும், பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் முதலில் விஜய்யை நடிக்க வைக்க ரஞ்சித் திட்டமிட்டு இருந்ததாகவும், சில காரணங்களால் அவருக்கு பதில் தற்போது விக்ரமை தேர்வு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஹீரோ படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் பல படங்களில் கதாபாத்திரத்துக்காக உடம்பை வருத்தி தோற்றங்களை மாற்றி நடித்து இருக்கிறார். தற்போது கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பல தோற்றங்களில் வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மகான் படமும் கைவசம் உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com