'மாவீரன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'மாவீரன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சமீபத்தில் இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'தங்கலான்' படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, இவர் தற்போது பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதனை தொடர்ந்து, 'மண்டேலா', 'மாவீரன்' போன்ற படங்களை இயக்கிய 'மடோன் அஸ்வின்' இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். 'மாவீரன்' படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே விக்ரம் 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனால் முதலில் எந்த படத்தில் விக்ரம் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com