விக்ரம் பிரபுவின் 26வது திரைப்பட அறிவிப்பு

விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.
விக்ரம் பிரபுவின் 26வது திரைப்பட அறிவிப்பு
Published on

நடிகர் விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.

நடிகர் பிரவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை ஆகிய வெற்றிப் படங்களில் கவனம் பெற்றார்.

கடைசியாக வெளியான ‘சிறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சிறை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் விக்ரம் பிரபு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டாலும், எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார். இறுதியாக அறிமுக இயக்குநர் சித்தார்த்தின் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபு தனது 26ஆவது படத்தை எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக விக்ரம் பிரபு கூறியுள்ளார். இதில் விக்ரம் பிரபு உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது படக்குழு.

தங்கக் கட்டியில் இருந்து உருகி வழிய அதில் ரத்தத்துடன் கால்தடங்கள் இருக்கும்படியான போஸ்டரை விக்ரம் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகுமென அந்தப் பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com