விக்ரம் பிரபுவின் 26வது படத்தின் டைட்டில் வெளியீடு

விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.
விக்ரம் பிரபுவின் 26வது படத்தின் டைட்டில் வெளியீடு
Published on

விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார்.

நடிகர் பிரவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை ஆகிய வெற்றிப் படங்களில் கவனம் பெற்றார். கடைசியாக வெளியான ‘சிறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சிறை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் விக்ரம் பிரபு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டாலும், எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார். இறுதியாக அறிமுக இயக்குநர் சித்தார்த்தின் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

விக்ரம் பிரபுவின் 26-வது படம்

விக்ரம் பிரபு தனது 26ஆவது படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'சத்ரியன்' (2017) திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு யுவன் சங்கர் ராஜா இருவரும் இணையும் இரண்டாவது கூட்டணி இது என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படம்

தங்க மார்க்கெட் பின்னணியை மையமாகக் கொண்டு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. இதில் விக்ரம் பிரபுவுடன் சிவத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் டைட்டில் வெளியீடு

விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com