தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை வாழ்த்திய கமல்

“உங்களுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது” என ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் நடித்தது குறித்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை வாழ்த்திய கமல்
Published on

கமல்ஹாசன் 4 வருடங்களுக்கு பிறகு நடித்த விக்ரம் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விக்ரம் படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் "பிரியமான கமல்ஹாசன் அண்ணா உங்களோடு நடித்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல வேண்டும் என புரியவில்லை. விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறி உள்ளது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் "ஏற்கனவே மிகவும் தாமதமாகி விட்டது. இது நீண்ட நாட்களாக நடக்க இருந்த விஷயம். இது உங்களுக்கு தெரியும். உங்கள் அன்பு ஏற்கனவே உள்ளது. அது இன்னும் அதிகமாகி இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி. மன்னிக்கவும் தம்பி சார்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சூர்யா சிரிக்கும் எமோஜியுடன் பெரிய அண்ணா என்று பதிவிட்டுள்ளார். வலைதளத்தில் கமல்ஹாசன் சூர்யா இடையே நடந்த இந்த உரையாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தற்போது சமூக வலைதளத்தில் இது வைரலாகவும் மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com