

மும்பை,
விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் காயத்ரி, புஷ்கர் இயக்கத்தில் தமிழில் 2017-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தி ரீமேக்கில் விக்ரம் காதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார். அதேபோல், வேதா கதாபாத்திரத்தில் சஃயிப் அலி கான் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தியில் வெளியாக உள்ள விக்ரம் வேதா திரைப்படத்தின் பஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடத்த வேதா கதாபாத்திரத்தில் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்.
இந்தி ரீமேக்கில் வேதா கதாபாத்திரத்தில் பஸ்ட் லுக் போஸ்டர் புகைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கருப்பு நிற சட்டையில் உடலின் சில பகுதிகளில் ரத்தக்கரையுடன் நிற்பது போன்ற தோற்றத்தில் உள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விக்ரம் வேதா திரைப்படத்தின் பஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.