மலையாள இயக்குனருடன் விக்ரம் கூட்டணி - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள இயக்குனருடன் விக்ரம் கூட்டணி - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான்.அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். அந்த படத்திலிருந்து ரசிகர்களால் அன்போடு 'சியான்' என்று அழைக்கப்படுகிறார்.

படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது. இதனிடையே, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வீர தீர சூரன்'. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், சாந்தி டாக்கீஸ் தயாரிக்க உள்ள விக்ரம் 63 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கே ராஜ்குமார் இயக்குகிறார்.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஏஆர்எம் (ARM) படத்தை இயக்கிய இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com