'ஓ போடு' இன்னும் சில தினங்களில்...: நடிகர் விக்ரமின் வைரல் பதிவு

நடிகர் விக்ரம் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஓ போடு' இன்னும் சில தினங்களில்...: நடிகர் விக்ரமின் வைரல் பதிவு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர் விக்ரமுக்கு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் நல்ல திருப்பு முனையை அளித்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பு பாராட்டப்பட்டதுடன் வசூலில் கலக்கிய பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து, சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். சியான் - 62 என தற்காலிகமாக பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இன்று ஜெமினி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகின்றன. சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பர்த்வாஜ் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், "iன்று அன்பை பொழிந்த அனைவருக்கும் மிக்க நன்றி.. விருவிருப்பான அப்டேட் இன்னும் சில தினங்களில்.எதாவது யூகிக்க முடிகிறதா? ஓ போட மறந்து விடாதீர்கள்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அநேகமாக ஜெமினி படத்தின் மறுவெளியீடு எப்போது இருக்குமென அப்டேட் வெளியாகுமென ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த பதிவில் ஜெமினி படத்தில் வந்த ஓ போடுங்க என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் சூப்பர் ஹிட் படமான ஜெமினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்குமா என ரசிகர்கள் ஆவருடன் கேட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com