'தோஸ்தானா 2' - விலகிய கார்த்திக் ஆர்யன்...இணைந்த முன்னணி நடிகர்?


Vikrant Massey in Karan Johars Dostana 2 after Kartik Aaryans exit
x

’தோஸ்தானா 2' படத்தில் கார்த்திக் ஆர்யன், ஜான்வி கபூர் மற்றும் லக்சய் ஆகியோர் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

மும்பை,

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படம் 'தோஸ்தானா 2' . இந்த படத்தில், கார்த்திக் ஆர்யன், ஜான்வி கபூர் மற்றும் லக்சய் ஆகியோர் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்போது புதிய நடிகர்கள் மற்றும் கதைக்களத்துடன் படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் '12த் பெயில்' பட பிரபலம் விக்ராந்த் மாஸ்ஸி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஜான்வி கபூருக்கு பதில் ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் படக்குழு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகததால் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

1 More update

Next Story