“வில் அம்பு” பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார்

‘வில் அம்பு’ பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், இன்று காலமானார்.
“வில் அம்பு” பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்  காலமானார்
Published on

‘வில் அம்பு’ பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இன்று இயற்கை எய்தினார். எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது வயது 49.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், 2016ல் வெளியான ‘வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார். ‘மாநகரம்’ ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கும் ‘வில் அம்பு’ படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தார். அதன் பின்னர் விக்ராந்த், யோகிபாபுவை வைத்து, ‘தி கில்லர் மேன்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருந்தார்.

நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com