சசிகுமார் நடிப்பில் கிராமத்து அதிரடி படம்

அதிரடி கிராமத்து படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
சசிகுமார் நடிப்பில் கிராமத்து அதிரடி படம்
Published on

என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண் மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவே இல்லை . அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து இளைஞராக சசிகுமார் நடிக்கும் புதிய படம், காரி. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடிக்கிறார்.

இவர், செம்பருத்தி பூ, 21-ம் நூற்றாண்டு ஆகிய மலையாள படங்களை டைரக்டு செய்தவர். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். வில்லனாக ஜே டி சக்கரவர்த்தி நடிக்க , டைரக்டர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, நாகிநீடு, பிரேம் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.லட்சுமன் குமார் தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com