கிராமத்து திரில்லர் கதை

கிராமத்து திரில்லர் கதை
Published on

சுரேஷ் ரவி நாயகனாகவும், தீபா பாலு நாயகியாகவும் புதிய படத்தில் நடிக்கின்றனர். இதில் யோகிபாபு, பிரிகிடா சகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்ய கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.பாலையா டைரக்டு செய்கிறார்.

படம் பற்றிநாயகன் சுரேஷ் ரவி, கூறும்போது, ``நாயகன் சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவர் சில காரணங்களால் சொந்த ஊரான மதுரைக்கு செல்லாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் நிர்பந்தத்தினால் ஊருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அவன் ஊருக்கு செல்ல எதற்காக பயந்தான்? அவனை ஊருக்கு அழைத்த தந்தை என்ன முடிவு செய்து இருந்தார்? என்பது கதை..

காமெடி, குடும்ப உறவுகள் மற்றும் திரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது. இசை: என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஷ்வரன், தயாரிப்பு: பாஸ்கரன், பி. ராஜபாண்டியன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com