'நான் உயிருடன் இருக்கிறேன்' உடல் நிலை வதந்தியால் வில்லன் நடிகர் கோபம்

'நான் உயிருடன் இருக்கிறேன்' உடல் நிலை வதந்தியால் வில்லன் நடிகர் கோபம்
Published on

பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, குத்து, ஏய், திருப்பாச்சி, பரமசிவன், லாடம், சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலை குறித்து தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை பார்த்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியானார்கள். பின்னர் அது உண்மை இல்லை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோட்டா சீனிவாசராவ் வெளியிட்ட வீடியோவில், "நான் உயிருடன் இருக்கிறேன். நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

உடல்நிலை குறித்து பரவிய தகவலை உண்மை என்று நம்பி 50-க்கு மேற்பட்டோர் போன் செய்து விசாரித்தனர். போலீசாரும் எனது வீட்டுக்கு வந்தனர். பணம் சம்பாதிக்க கோடிக்கணக்கான வழிகள் இருக்கிறது. இதுபோன்ற பொய் தகவல்களை பரப்ப வேண்டாம்'' என்று கோபமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com