

சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் 'வடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வடம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ரோபோ சங்கரின் இறுதி சடங்குக்கு செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில்,
"நடிகர் ரோபோ சங்கர் மறைந்த தருணத்தில், நான் குற்றாலத்தில் வடம் படத்திற்கான படப்பிடிப்பிலிருந்தேன், அந்த காட்சியானது அதிகமான பொருட்செலவுடன் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என இயக்குனர், தயாரிப்பாளரிடம் கேட்டேன், அவர்கள் செல்ல வேண்டாம் என சொல்லிவிட்டனர்.
மறுநாளே குற்றாலத்தில் ரோபோ சங்கருக்கு பேனர் வைக்கப்பட்டு 500 பேருக்கு புடவையும் 2000 மரக்கன்றையும் தயாரிப்பாளர் வழங்கினார். இதன் மூலம் அவரது ஆன்மா சாந்தி அடையும் என நம்புகிறேன்" என்றார்.