

சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நடராஜ் (நட்டி), சனஷ்கா ஸ்ரீ, முனிஷ்காந்த், பால சரவணன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், தீபா ஷங்கர், இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர்.
தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில் உருவான, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ‘பாண்டிமுனி’ பர்ஸ்ட் சிங்கிளை ஞானகரவேல் எழுதி இமான் இசையில் அந்தோணிதாசன் பாடியிருந்தார்.
இந்நிலையில், ‘வடம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 6ம் தேதி வெளியாகிறது.