

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹாலிவுட் தொடர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’. கடந்த 2001-ல் வெளியான கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட இந்த தொடரின் முதல் பாகத்தின் வெற்றியையடுத்து பல பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 7-ல் பால் வாக்கர்,கோடி வாக்கர், நதாலி இம்மானுவேல், ஜேசன் ஸ்டாதம், வின் டீசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ தொடரின் 11வது மற்றும் கடைசி பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் , ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ தொடரின் 11வது பாகத்திற்க்கு 'Fast Forever' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் 2028 மார்ச் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வின் டீசல் இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், நடிகர் பவுல் வால்கர் உடன் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகத்தில் தான் இருந்த புகைப்படத்தை வின் டீசல் பகிர்ந்துள்ளார்.