மீண்டும் வில்லனாக வினய்

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர்.
மீண்டும் வில்லனாக வினய்
Published on

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் பேட்ட, மாதவனின் விக்ரம் வேதா, விஜய்யுடன் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். இதுபோல் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த வினய் ஏற்கனவே நேத்ரா, விஷாலின் துப்பறிவாளன் ஆகிய படங்களில் வில்லனாக வந்தார். தற்போது சூர்யா படத்திலும் வில்லனாக நடிக்க பேசி வருகிறார்கள். இது சூர்யாவுக்கு 40-வது படம். பாண்டிராஜ் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கினார்கள். கொரோனாவில் குணமடைந்து சூர்யாவும் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க தயாராகி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com