15 ஆண்டுகளை நிறைவு செய்த 'விண்ணைத்தாண்டி வருவாயா'

சிம்பு மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
15 ஆண்டுகளை நிறைவு செய்த 'விண்ணைத்தாண்டி வருவாயா'
Published on

சென்னை,

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இந்த படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் விடிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், ஜனனி ஐயர் ஆகியேருடன் இணைந்து சமந்தா- நாக சைதன்யாவும் நடித்திருந்தனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான சிறந்த ஆல்பங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். சிறந்த விமர்சனத்தை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வசூலை குவித்தது.

அதுமட்டுமில்லாமல் இப்படம் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் (1000 நாட்கள்) என்கிற சாதனையை பெற்றுள்ளது. இந்தநிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கெண்டாடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com