ரீ-ரிலீஸாகும் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் தெலுங்கு வெர்ஷன்

நாக சைத்தன்யா - சமந்தா நடிப்பில் வெளியான ‘ஈ மாயா சேசாவா’ படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீ-ரிலீஸாகும் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் தெலுங்கு வெர்ஷன்
Published on

சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது. அவ்வகையில் ரீ ரிலீஸான 'கில்லி' திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படம் ரீ ரிலீஸில் 1000 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. விண்ணைத்தாண்டி வருவாயா ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பில் உருவான சிறந்த ஆல்பங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

நாக சைத்தன்யா, சமந்தா இணைந்து நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஈ மாயா சேசாவா' படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகி 15 வருடங்களை நிறைவு செய்துள்ளது. 

'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021ம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com