வைரலான நெருக்கமான காட்சி... ஊர்வசி ரவுத்தேலா சொன்ன விளக்கம்

படுக்கையறை காட்சி ஒன்றை படமாக்குவது தொடர்பான வீடியோவை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
வைரலான நெருக்கமான காட்சி... ஊர்வசி ரவுத்தேலா சொன்ன விளக்கம்
Published on: 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. படப்பிடிப்புக்காக எடுக்கப்படும் காட்சியாக இருந்தாலும், இதுபோன்ற நெருக்கமான காட்சிகளை ஏன் சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வீடியோ வெளியிட்டதன் நோக்கம் குறித்து ஊர்வசி ரவுத்தேலா விளக்கம் அளித்துள்ளார்.

படுக்கையறை காட்சி வீடியோ

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா, தமிழில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். நடிப்புடன் மட்டுமல்லாமல், பல்வேறு படங்களில் இடம்பெற்ற குத்துப்பாடல்களிலும் தனது நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதற்கிடையே, படப்பிடிப்பு தளத்தில் படுக்கையறை காட்சி ஒன்றை படமாக்குவது தொடர்பான வீடியோவை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ஆண் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

வீடியோவுக்கு எதிர்ப்பு

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. படப்பிடிப்புக்காக எடுக்கப்படும் காட்சியாக இருந்தாலும், இதுபோன்ற நெருக்கமான காட்சிகளை ஏன் சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வீடியோ வெளியிட்டதன் நோக்கம் குறித்து ஊர்வசி ரவுத்தேலா விளக்கம் அளித்துள்ளார்.

“தவறு எங்களிடம் இல்லை”

இதுகுறித்து அவர் கூறியதாவது: “நடிகைகள் நீங்கள் நினைப்பது போல அல்ல. படப்பிடிப்பு தளத்தில் எப்படி பாதுகாப்பாக நடிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவே அந்த வீடியோவை வெளியிட்டேன். தவறு எங்களிடம் இல்லை. தவறான கண்களைக் கொண்டவர்களிடம் தான் உள்ளது. அந்த கண்களிடம் இருந்து கருணையை எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மைதான்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com