மகனுடன் கிரிக்கெட் விளையாடும் 'அஜித்' - வீடியோ வைரல்

நடிகர் அஜித், தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
Viral pics! Ajith and his son Aadvik set father-son goals
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தனது குடும்பத்துடன் அடிக்கடி நேரத்தை செலவிடுவது வழக்கம். அதன்படி தற்போது நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக்-உடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது நடிகர் அஜித் , 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இவர் இவ்வாறு இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிந்தது.

அதே நேரத்தில், மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் நாளை அஜர்பைஜானுக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com