"விஷால் 35" படப்பிடிப்பு அப்டேட்

விஷாலின் 35வது படத்தினை 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார்.
"விஷால் 35" படப்பிடிப்பு அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஆர்பி சவுத்ரி சார்பில் சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். இந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னை பூந்தமல்லியில் தொடங்க உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com