“மகுடம்” படத்திற்கான டப்பிங் பணியில் விஷால்

‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் டப்பிங் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
“மகுடம்” படத்திற்கான டப்பிங் பணியில் விஷால்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது மகுடம் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து இயக்குனர் ரவி அரசு விலகினார். இதனையடுத்து இப்படத்தை யார் இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். மகுடம் படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். விஷாலே இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், மகுடம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் டப்பிங் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. விஷால் இன்று மகுடம் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com