சிகிச்சைக்காக கேரளா சென்றார், விஷால்

அடிபட்ட கையில் பயங்கரமாக வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக விஷால் கேரளா சென்றார்.
சிகிச்சைக்காக கேரளா சென்றார், விஷால்
Published on

விஷால் இப்போது, லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 55 நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. விஷால் தொடர்பான உச்சக்கட்ட சண்டை காட்சிகளை 30 நாட்களாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெயின் படமாக்கி வந்தார்.

உயரமான ஒரு இடத்தில் இருந்து குழந்தையுடன் விஷால் குதிப்பது போன்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நொடி தாமதம் ஆனதால் விஷாலின் கையில் பலத்த அடிபட்டது. சில மணி நேரம் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்தார்.

2 நாட்களுக்கு முன், அடிபட்ட கையில் பயங்கரமாக வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக விஷால் கேரளா சென்றார். இதனால், லத்தி படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com