“மகுடம்” படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஷால்


“மகுடம்” படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஷால்
x

விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படம் கோடைவிடுமுறையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டன. அதாவது, தொடர்ந்து 17 இரவுகள் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. நடிகர் விஷால் ‘மகுடம்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் துடிப்பான வாலிபராக நடிகர் விஷால் காணப்படுகிறார். மேலும் இப்படம் வரும் கோடைவிடுமுறையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story