விஷாலின் நடவடிக்கையால் ராஜினாமா என பொன்வண்ணன் கூறியிருப்பதை வரவேற்கிறேன்- சேரன்

விஷாலின் நடவடிக்கையால் ராஜினாமா என பொன்வண்ணன் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என இயக்குனர் சேரன் கூறி உள்ளார்.
விஷாலின் நடவடிக்கையால் ராஜினாமா என பொன்வண்ணன் கூறியிருப்பதை வரவேற்கிறேன்- சேரன்
Published on

சென்னை

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக நடிகர் பொன்வண்ணன் கடிதம் கொடுத்தார். நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனின் ராஜினாமா கடிதம் நடிகர் சங்கத்தால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது

இது குறித்து பொன்வண்ணன் கடிதத்தில் கூறியதாவது:-

நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல் என கடிதத்தில் பொன்வண்ணன் கூறி உள்ளார்.

பொன்வண்ணன் ராஜினாமா குறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது:-

விஷாலின் நடவடிக்கையால் ராஜினாமா என பொன்வண்ணன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இளைஞர் என்பதால் மட்டும் அரசியலில் போட்டியிட முடியாது, அனுபவமும் தேவை . விஷால் அரசியலுக்கு வருவதை எதிர்க்கவில்லை, இன்னும் தன்னை வளர்த்துக்கொண்டு விஷால் அரசியலில் ஈடுபடலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com