விஷாலின் “மகுடம்” பட டீசர் வெளியானது

விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி நடித்துள்ளனர்.
விஷாலின் “மகுடம்” பட டீசர் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்டிருந்த அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘மகுடம்’ திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

டீசர் வெளியீடு

இதனையடுத்து, ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. பாரதி ராஜாவின் மறைவையொட்டி நேற்று வெளியாக இருந்த ‘மகுடம்’ படத்தின் டீசர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com