விஷாலின் “மகுடம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


விஷாலின் “மகுடம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 27 Aug 2025 2:04 PM IST (Updated: 15 Oct 2025 7:44 PM IST)
t-max-icont-min-icon

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் 35வது படத்திற்கு ‘மகுடம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தினை 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்குகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள பர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

1 More update

Next Story