விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..!

நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..!
Published on

சென்னை

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இன்று வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com