'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்

'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை விஷ்ணு விஷால் நிறைவு செய்துள்ளார்.
'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்
Published on

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தில் தனது பகுதி காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்தார். இந்த நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்துள்ளார். இதனை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com