3-வது முறையாக இணையும் 'ராட்சசன்' கூட்டணி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

'ராட்சசன்' படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார்.
3-வது முறையாக இணையும் 'ராட்சசன்' கூட்டணி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

சென்னை,

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால், 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குனர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் படம் உருவாக இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com