இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்'

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்'
Published on

சென்னை ,

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,ராட்சசன்,கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் மட்டைப்பந்து வீரரும் ஆவார். கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை .

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராட்சசன் படத்திற்க்கு பின் போலீஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் நடிக்கும் திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்கவுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com