விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' படப்பிடிப்பு நிறைவு

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
Vishnu Vishal's 'Aryan' shooting wrapped
Published on

சென்னை ,

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,ராட்சசன்,கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். 

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com