விஸ்வாசம் சிங்கிள் டிராக் வெளியீடு: இணையத்தில் வைரலாகும் ‘அடிச்சுத்தூக்கு’...

‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஸ்வாசம் சிங்கிள் டிராக் வெளியீடு: இணையத்தில் வைரலாகும் ‘அடிச்சுத்தூக்கு’...
Published on

சென்னை,

அஜித்- சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கில் டிராக் அடிச்சுத் தூக்கு என்ற பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. விவேகா எழுதியுள்ள இப்பாடலை இமான், ஆதித்யா, நாராயண் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் இப்பாடலை வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com