சிரஞ்சீவி படத்தில் இணையும் இளம் நடிகை ஆஷிகா ரங்கநாத்...

image courtecy:instagram@ashika_rangnath
நடிகை ஆஷிகா ரங்கநாத் 'விஸ்வம்பரா' படத்தில் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சிரஞ்சீவி ஜோடியாக நடிகை திரிஷா 'விஸ்வம்பரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 18 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். பேன்டசி திரில்லர் பாணியில் உருவாகும் 'விஸ்வம்பரா' படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் கொண்ட இரண்டு வேடங்களில் திரிஷா நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும் சுரபி, இஷா சாவ்லா, சிரஞ்சீவிக்கு சகோதரிகளாகவும் நடிக்கின்றனர். இப்படம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இப்படத்தில் இளம் நடிகை ஆஷிகா ரங்கநாத் சிரஞ்சீவிக்கு சகோதரியாக நடிப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை ஆஷிகா ரங்கநாத் 'விஸ்வம்பரா' படத்தில் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.






