

அந்த படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது. இந்த வெற்றியையும், வசூல் சாதனையையும் இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.
இதுபற்றி ஒரு பட விழாவில் பேசும்போது, தயாரிப்பாளர் டி.சிவா குறிப்பிட்டார். விஸ்வாசம் படம் ரூ.100 கோடி வசூலித்தது என்றால் அதில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் டி.இமானுக்கு உண்டு. அவர் இசையமைத்த கண்ணான கண்ணே என்ற இனிமையான பாடலும் வெற்றிக்கு ஒரு காரணம். இதற்காகவே இமானுக்கு ரூ.50 கோடி சம்பளமாக கொடுக்கலாம் என்று அவர் பேசினார்.