‘விஸ்வரூபம்–2’ படம் வெளியானதும் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்

விஸ்வரூபம்–2 படம் வெளியானதும் அரசியலில் ஈடுபட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடக்கிறது.
‘விஸ்வரூபம்–2’ படம் வெளியானதும் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்
Published on

சென்னை,

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். ஆனாலும் அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்ற அறிவிப்பை இதுவரை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் விஸ்வரூபம்2 படம் வெளியானதும் அரசியலில் குதிப்பார் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது.

இந்த படம் 2013ல் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. இதில் கமல்ஹாசன் மத்திய உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதன் முதல் பாகம் வெளியானபோது எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் தமிழகத்தில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. ஆனால் வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது.

அதன் பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. அந்த படத்தின் தொடர்ச்சியாகவே விஸ்வரூபம்2 வெளியாக இருப்பதால் படத்துக்கு பரபரப்பான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் பூஜாகுமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது.

தற்போது விடுபட்ட சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாகி வருகிறது. ஓரிரு வாரத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட உள்ளனர். அடுத்த மாதம் (ஜனவரி) 26ந் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வருகிறது. எனவே அடுத்த மாதமே கட்சி பெயரை கமல்ஹாசன் அறிவித்து அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சபாஷ்நாயுடு படத்தில் நடிப்பதாக அறிவித்து வெளிநாடுகளில் அதன் முதல் கட்ட படப்பிடிப்பையும் நடத்தி விட்டு வந்தார். அதன்பிறகு வீட்டு படிக்கட்டில் கமல்ஹாசன் தவறி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கப்போவதாக அறிவித்தார். இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளிலும் அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com