சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தில் 'விஸ்வாசம்' நடிகை

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் பாப்ரி கோஷ் இணைந்திருக்கிறார்.
சென்னை,
'டூரிங் டாக்கீஸ்', 'ஓய்', 'சக்க போடு போடு ராஜா', 'பைரவா', 'விஸ்வாசம்' போன்ற படங்களில் நடித்தவர், பாப்ரி கோஷ். தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் இவர் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக புகைப்படத்தை பகிர்ந்த பாப்ரி கோஷ், சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






