அஜித் பற்றி உற்சாகம் பொங்க பேசிய 'விவேகம்' பட நடிகர்


vivek oberoi spoke enthusiastically about Ajith
x

கடந்த 2017-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் விவேக் ஓபராய்

சென்னை,

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விவேக் ஓபராய். இவர் கடந்த 2002-ம் ஆண்டு அஜய் தேவ்கன், மோகன்லால், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான 'கம்பெனி' திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கிரிஸ் 3, லூசிபர், வினய விதேய ராமா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில், கடந்த 2017-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய், அஜித் பற்றி உற்சாகம் பொங்க பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கவேண்டும். உங்கள் வழியைதான் நான் பின்பற்றி வருகிறேன். கடந்தமுறை நீங்கள் ரேஸில் பங்கேற்றபோது உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அடுத்தமுறை எனக்கு போன் செய்தால் உங்களுக்காக விசில் அடித்து கொண்டாட நான் ஓடோடி வருவேன்" என்றார்.

1 More update

Next Story