பஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்

பஸ் தின சம்பவம் பற்றி நடிகர் விவேக் மீம்ஸ் வெளியிட்டுள்ளார்.
பஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்
Published on

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், சமூக பிரச்சினைகளை அடிக்கடி வலைத்தளத்தில் பேசி வருகிறார். பெண்கள் பாதுகாப்பு, மாணவர்கள் நலன், அரசியல் சர்ச்சைகள் பற்றியெல்லாம் குரல் கொடுக்கிறார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு திட்டமான மரக்கன்றுகள் நடுதலையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த பஸ் தின விபத்தையும் மீம்ஸ் ஆக பகிர்ந்துள்ளார். இந்த விபத்து அனைவரையும் உலுக்கியது. ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து பஸ் தின கொண்டாட்டத்துக்கு பயன்படுத்தினர். பஸ் மேல் கூரையில் 20-க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து தாளம் போட்டு பாட்டு பாடியபடி வந்தனர்.

அமைந்தகரையில் திடீரென்று பஸ் டிரைவர் பிரேக் பிடிக்க மேற்கூரையில் இருந்த மாணவர்கள் அப்படியே கீழே சரிந்து விழுந்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படம் அல்ல பாடம் என்று பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் விவேக்கும் படிக்காதவன் படத்தில் தாதாவின் அடியாட்களிடம் அடிவாங்கி வருவதையும் மாணவர்களின் பஸ் தின கொண்டாட்டத்தையும் இணைத்து உருவாக்கி உள்ள மீம்சை தனது டுவிட்டரில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒருவர் எனக்கு அனுப்பி வைத்துள்ள இந்த மீம்சை பார்த்து உங்களால் சிரிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com