வருண் தேஜின் பிறந்தநாளில் வெளியான அடுத்த பட அறிவிப்பு

கடந்த 2014-ல் வெளியான ’முகுந்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வருண் தேஜ்.
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ். இவர் கடந்த 2014-ல் வெளியான 'முகுந்தா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடைசியாக இவர் நடித்திருந்த படம் 'மட்கா'.இப்படம் இவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது. இந்நிலையில், கம்பேக் கொடுக்க இவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நேற்று வருண் தேஜின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்காலிகமாக விடி15 எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ராஜா, ஏக் மினி கதா போன்ற வெற்றிப் படங்களுக்கு பெயர் பெற்ற மேர்லபாகா காந்தி இயக்குகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.
Related Tags :
Next Story






