வாய்ப்புகளுக்காக காத்திருந்த தனக்காக இப்போது வாய்ப்புகள் காத்திருக்கின்றன -பெருமைப்படும் டாப்ஸி

தென்னிந்திய படங்களில் வாய்ப்புகளுக்காக காத்திருந்த டாப்ஸி இப்போது தனக்காக வாய்ப்புகள் காத்திருப்பதாக பெருமைபட்டு உள்ளார்.#TaapseePannu #Cinemanews
வாய்ப்புகளுக்காக காத்திருந்த தனக்காக இப்போது வாய்ப்புகள் காத்திருக்கின்றன -பெருமைப்படும் டாப்ஸி
Published on

மும்பை

ஜூட்வா-2 இந்திபட வெற்றியை தொடர்ந்து டாப்ஸி தனது உடல் எடையை குறைத்து மெலிந்து அழகாக காணப்படுகிறார். இந்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாத்திரங்கள் ஏற்று நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்துகொண்டிருக்கின்றன.

பிங்க் மற்றும் நாம் ஷபானா படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய போதும் நிரம்பிய அவர் ஜூட்வா 2 போன்ற ஒரு மசாலா பொழுதுபோக்கு பட்ஜெட்படங்களிலும் நடித்து வருகிறார்

அவருடைய வரவிருக்கும் திரைப்படங்கள் கலவையான படங்களாக உள்ளது தில் ஜுன்கெய்ல்- காதல் நகைச்சுவை படம் முல்க்- சமூக திரில்லர் படம், இது மன்மாரியியான் உண்மையான சம்பவங்களை தழுவி எடுக்கபட்டபடமாகும்.

இந்த நிலையில் டாப்ஸி பாலிவுட்டில் தனது பயணம் குறித்தும் தனது போராட்டம் விருப்பங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார்.தென்னிந்திய படங்களில் வாய்ப்புகளுக்காக காத்திருந்த டாப்ஸி இப்போது தனக்காக வாய்ப்புகள் காத்திருப்பதாக விளாசியிருக்கிறார். டாப்ஸி கூறியதாவது:-

தெலுங்கு படமான அனந்தோ பிரம்ஹா படத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கதை எனது கால்ஷீட்டுக்காக ஒரு வருடம் எடுக்காமல் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்படத்தில் சம்பளத்துக்கு பதில் ஷேர் (பங்கு) தர தயாராக இருந்தனர். தற்போது இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கு கால்ஷீட் தர ஒரு மாதம் ஆகும் நிலை ஏற்பட்டது.

அதை பட தரப்பினர் ஏற்றுக்கொண்டதுடன் எனது கால்ஷீட் தேதிகளுக்கு ஏற்ப தங்களது கால்ஷீட்டை மாற்றித்தரும் தன்மைகொண்ட ஹீரோவை ஒப்பந்தம் செய்வதாகவும் கூறினார்கள். இதையடுத்து அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பதிலாக வேறு நடிகையை மாற்றிக்கொள்ளலாம் என்ற சூழ்நிலை மாறி என்னை மாற்ற முடியாத அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன். இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com