'ஜனநாயகன் படத்திற்கு வெயிட்டிங்' - நடிகர் அருண் விஜய்


Waiting for Vijays film Jananaayagan - Actor Arun Vijay
x

அருண் விஜய் தற்போது ‘ரெட்ட தல’ படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அருண் விஜய், விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ’ஜனநாயகன்’ படத்திற்கு காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அருண் விஜய் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய அருன் விஜய், ’ஜனநாயகன்’ படத்தின் மீதுள்ள தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில்,

“விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு வெயிட்டிங். சக நடிகன் என்ற முறையில் விஜயின் கடைசிப் படம் என்பது எனக்குமே கஷ்டம்தான். என்றைக்கும் அவருக்கு நம்மளுடைய ஆதரவு இருக்கும்" என்றார்.

ஜன நாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

1 More update

Next Story