''கதாநாயகி இல்லாமல் எந்த படமும் இல்லை'' - நடிகை வாமிகா கபி

வாமிகா கபி ஹீரோயின்களுக்கிடையேயான சம்பள பாகுபாடு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
'மாலை நேரத்து மயக்கம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் வாமிகா கபி. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வாமிகா கபி ஹீரோயின்களுக்கிடையேயான சம்பள பாகுபாடு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில்,
''ஒருவருக்கு அதிக சம்பளம், ஒருவருக்கு குறைவான சம்பளம் என்பது எனக்கு கவலை அளிக்காது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது திறமைக்கேற்றவாறு சம்பளம் உண்டு. ஆனால் ஹீரோயின்கள் பெண்கள் என்பதால் குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறது.
கேட்டால் ஹீரோக்கள் பார்வையாளர்களை அதிகமாக ஈர்க்கிறார்கள் என்று கூறுகின்றனர். கதாநாயகி இல்லாமல் எந்த படமும் இல்லை' என்றார்.
Related Tags :
Next Story






