ஆலியா, கீர்த்தி, அனன்யாவிடமிருந்து அதை திருட விரும்புகிறேன் - வாமிகா கபி


Wamiqa Gabbi Praises Karan Johar’s Support for Alia Bhatt: “I Want to Steal Him”
x
தினத்தந்தி 18 Jun 2025 8:47 AM IST (Updated: 18 Jun 2025 8:58 AM IST)
t-max-icont-min-icon

ஆலியா பட்டின் நட்சத்திரப் பயணத்தில் கரண் ஜோஹர் உறுதியான ஆதரவாக இருந்துள்ளார்

மும்பை,

ஆலியா பட்டிடமிருந்து கரண் ஜோஹரை திருட விரும்புவதாக வாமிகா கபி சமீபத்தில் தெரிவித்தார்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராய் முதல் கிரித்தி சனோன் வரை, ஆலியா பட்டின் நட்சத்திரப் பயணத்தில் கரண் ஜோஹர் எவ்வாறு உறுதியான ஆதரவாக இருந்துள்ளார் என்பதை எப்போதும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே கருத்தைதான் தற்போது நடிகை வாமிகா கபியும் கூறி இருக்கிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய வாமிகா கவி, ஆலியா பட்டிடமிருந்து தான் திருட விரும்பும் ஒரே விஷயம் கரண் ஜோஹர் என்று கூறினார்

அதே நேர்காணலில், அனன்யா பாண்டேயின் சருமம், கீர்த்தி சுரேஷின் பணிவு, வருண் தவானின் ஆற்றல், கிரித்தி சனோனின் உயரம் உள்ளிட்ட பிற நட்சத்திரங்களின் அம்சங்கள் மற்றும் பண்புகளை "திருடுவது" குறித்தும் வாமிகா நகைச்சுவையாகக் கூறினார்.

2012-ம் ஆண்டு கரண் ஜோஹரின் ''ஸ்டூடண்ட் ஆப் தி இயர்'' படத்தின் மூலம் ஆலியா பட் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, ஹைவே, டியர் ஜிந்தகி, கல்லி பாய், கங்குபாய் கதியாவதி போன்ற படங்களில் நடித்து ஆலியா பட் ஒரு சிறந்த நடிகையாக மாறியுள்ளார்.

1 More update

Next Story