ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர்...''வார் 2'' படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


War 2 Cast Fees: Here’s What Hrithik Roshan, Jr NTR Are Charging
x

இந்த படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே ''வார் 2'' தான் அதிக பட்ஜெட் படமாகும். இந்த படம் மார்க்கெட்டிங் செலவுகளைத் தவிர்த்து ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடித்திருக்கும் ''வார் 2'' படம் அடுத்த மாதம் 14-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த நட்சத்திரங்கள் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜூனியர் என்.டி.ஆர் தனது கதாபாத்திரத்திற்காக ரூ.70 கோடி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹிருத்திக் ரோஷன் ரூ.50 கோடியும், கியாரா அத்வானி ரூ.15 கோடியும் வாங்கி இருப்பதாக தெரிகிறது.

அதேபோல், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனில் கபூருக்கு ரூ.10 கோடியும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு ரூ.30 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story