5 நாட்களில் ரூ 300 கோடி வசூலித்த “வார் 2”

ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘வார்’ படத்தின் முதல் பாகம் 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டரானது.
மும்பை,
பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான ‘வார் 2’, கடந்த 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியானது. அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘வார்’ படத்தின் முதல் பாகம் 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டரானது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ‘வார் 2’ திரைப்படம் உலகளவில் ரூ 300 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 240 கோடி வசூலித்துள்ளது.






