'போர் தொழில்' 2-ம் பாகம் வரும் - நடிகர் சரத்குமார்

'போர் தொழில்' 2-ம் பாகம் வரும் - நடிகர் சரத்குமார்
Published on

சரத்குமார் நடித்த 'போர் தொழில்' படம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. தற்போது 'பரம்பொருள்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அமிதாஷ், வின்சென்ட் அசோகன், காஷ்மிரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், ''நான் நடித்த சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை தயாராகி வருகிறது. போர்த்தொழில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டம் உள்ளது. பரம்பொருள் படம் சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ளது. அரவிந்த் ராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மனோஜ், கிரிஷ் தயாரித்துள்ளனர்.

படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். முந்தைய சாயல் இல்லாமல் இது வேறுமாதிரியான போலீஸ் கதையாக இருக்கும். சீரியஸ், யதார்த்தம், நட்பு என்று பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபத்திரத்தில் வருகிறேன். நாங்குநேரி சம்பவம் கவலை அளிக்கிறது. சமூகத்தில் சாதிமோதல்கள் நடக்கக்கூடாது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com