காருக்குள் மர்ம நபருக்கு லிப் லாக் பிரபல நடிகை...!

பிரபல பாலிவுட் நடிகை அடையாளம் தெரியாத மர்ம நபருக்கு லிப் லாக் அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன
காருக்குள் மர்ம நபருக்கு லிப் லாக் பிரபல நடிகை...!
Published on

மும்பை

கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற நடிகை கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்

பூமி பெட்னேகர் செம அழகாக உடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தனது காரில் ஏறிய நிலையில், பூமி பெட்னேகர் செய்த செயல் குறித்த வீடியோ வெளியாகி பாலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விழா முடிந்து வீட்டுக்கு சென்று பண்ண வேண்டிய விஷயங்களை விழா முடிந்து காருக்குள் ஏறியதும் நடிகை பூமி பெட்னேகர் செய்த நிலையில், அந்த காட்சிகள் வீடியோ மூலம் பதிவாகி விட்டன. காருக்குள் மர்ம நபர் ஒருவருக்கு பூமி பெட்னேகர் முரட்டுத் தனமாக லிப் லாக் அடிக்கும் காட்சிகள் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.

பூமி பெட்னேகர் பிரபல பில்டரான யஷ் கட்டாரியா என்பவரை காதலித்து வருவதாகவும், அந்த தொழிலதிபருடன் தான் காருக்குள் அப்படி முத்த மழை பொழிந்துள்ளார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூமி பெட்னேகர் இதுவரை எந்த மூச்சும் விடவில்லை. விரைவில் தனது காதலை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த  பூமி பெட்னேகர்

கடந்த 2015ம் ஆண்டு வெளியான தம் லகா கே ஹைசா படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானாவர் பூமி பெட்னேகர். டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறினார். மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சோன்சரியா படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் செம போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்திருந்தார் பூமி பெட்னேகர். கடந்த ஆண்டு வெளியான கோவிந்த் நாம் மெரா படத்தில் கியாரா அத்வானி மற்றும் விக்கி கவுஷல் உடன் இணைந்து படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு ரக்ஷா பந்தன், கோவிந்தா நாம் மெரா உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com