வயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்


வயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்
x
தினத்தந்தி 14 Aug 2024 5:25 AM GMT (Updated: 14 Aug 2024 5:27 AM GMT)

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சென்னை,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சிரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் மண்ணில் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வழங்கியுள்ளார். மேலும் நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.


Next Story